கோவை: கோவையில் பாஜ தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ நேற்று நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசுகளே நடத்தலாம். பேரூர் குடமுழுக்கை வாய்ப்பு இருந்தால் தமிழிலும் செய்ய வேண்டும். ஆலயங்களில் பூஜை செய்யும் போது, தமிழுக்கு உரிய முக்கியத்துவம் தர வேண்டும். இறைவனுக்கு மொழி பாகுபாடு இல்லை. தமிழை புறக்கணிக்கக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement


