மதுரை: கோயில் திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த நிபந்தனையுடன் அனுமதி வழங்கி உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது. உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு உட்பட்ட 14 மாவட்டங்களில் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி வழக்கு தொடரப்பட்டது. ஆடல், பாடல் நடைபெறும் உள்ளாட்சி அமைப்புகளின் செயலாளரிடம், ரூ.25 ஆயிரம் மனுதாரர் செலுத்த வேண்டும். மனுதாரரின் 25 ஆயிரத்தை கொண்டு, அந்த கிராமத்தில் நீர் நிலைகளை தூர் வார வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
கோயில் திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி தர உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
0