செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த ஒழலூர் கோயிலில் ஆடி மாத திருவிழாவில் பேனர் வைத்ததில் இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், நிதிஷ்குமார் (24), சுமன்ராஜ் (23) ஆகிய இருவர் காயமடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கோயில் திருவிழாவில் பேனர் வைத்ததில் சிலர் கழுத்தில் கத்தியை வைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக ஒழலூர் பகுதியை சேர்ந்த சுமன்ராஜ் செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் இருவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மூன்று பேரையும் தேடி வருகின்றனர்.