மதுரை: கோயில் நிலத்தில் உள்ள தற்காலிக கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளை வைக்க தடை விதிக்க முடியாது என நீதிபதிகள் கூறியுள்ளனர். கொயில் நிலத்தில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட தடை கோரி இந்து முன்னணி பிரமுகர் ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனித குலத்துக்கு செய்யும் சேவைதான் கடவுளுக்கும் செய்யும் சேவை என்று ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். விவசாயிகள் தங்களின் நெல் மூட்டைகளை கோயில் நிலத்தில் அடுக்கி வைப்பதில் எந்தத் தவறும் இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.