புதுவை காமாட்சியம்மன் கோயில் நில அபகரிப்பு வழக்கில் தேடப்பட்டுவந்த நில அளவைத்துறை இயக்குநர் ரமேஷ் கைதுசெய்யபட்டுள்ளார். கும்பகோணத்தில் பதுங்கி இருந்த நில அளவைத்துறை இயக்குநர் ரமேஷை சிறப்பு அதிரடிப்படை போலீசார் கைது செய்தனர். கோயிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்பிலான 64,000 சதுரடி நிலத்திற்கு போலி ஆவணம் தயாரித்து விற்றதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.