Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கோயில் நிலம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; 5 ஐஏஎஸ் அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கடலூர் மாவட்டம் கூத்தப்பாக்கம் தேவநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான 3.40 ஏக்கர் நிலத்தில் உள்ள புனித ஜோசப் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியை அகற்றக் கோரி பாஜவின் ஆன்மிக மற்றும் கோயில் மேம்பாட்டுப் பிரிவின் மாநில செயலாளர் வினோத் ராகேந்திரன் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பள்ளியை அப்புறப்படுத்தி, கோயில் நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என 2024ல் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக்கூறி தமிழக வருவாய் துறை செயலாளர் அமுதா, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதுமதி, அறநிலைய துறை செயலாளர் சந்தரமோகன், ஆணையர் தர், கடலூர் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் குமார், அறநிலைய துறை இணை ஆணையர் பரணிதரன், கோயில் செயல் அலுவலர் வெங்கடகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக வினோத் ராகவேந்திரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கே.ஆர்.ராம் மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் அடங்கிய அமர்வு, 5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை ஜூலை 10ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளி வைத்தது.