மதுரை : கோயில் நிர்வாக நடைமுறையில் தலையிட விரும்பவில்லை என ஐகோர்ட் கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.திருச்சி திருவெறும்பூர் அருகே துவாக்குடியில் செல்லாயி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் விழாக்களில் யாருக்கும் முதல் மரியாதை வழகக்கூடாது என வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது தனிநபர் கோயிலுக்கு நன்கொடை அல்லது வேறு உதவி செய்தால் கோயில் சார்பில் அங்கீகரிக்க வேண்டுமா? வேண்டாமா? என நீதிபதி கேள்வி எழுப்பினார். பின்னர் சிவகங்கை மாவட்ட அறநிலையத்துறை இணை ஆணையர் இதற்கு பதில் மனு தாக்கல் செய்யவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
மேலும் கோயில் நிர்வாக நடைமுறையில் அறநிலையத்துறை அதிகாரிகள் தான் முடிவு செய்ய வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார். அதே வேளையில் பொதுநலன் கருதி ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் நீதிபதி புகழேந்தி கருத்து தெரிவித்தார். மேலும் கண்டனூரைச் சேர்ந்த சின்னன் என்பவரின் வழக்கை ஜூலை 21க்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்து.