ஆந்திரா: தெலுங்கு தேசம் – ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மோதல் காரணமாக ஆந்திரா செல்லும் சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. வேலூரில் இருந்து ஆந்திர மாநிலம் திருப்பதி, சித்தூர் செல்லும் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சாலையின் குறுக்கே மரங்கள், கற்களைப் போட்டு போக்குவரத்தை துண்டித்துள்ளனர். சித்தூர் மாவட்டத்தில் பந்த் நடப்பதால் தமிழகம் -ஆந்திரா இடையிலான போக்குவரத்துக்குத் தடை விதித்துள்ளனர்.