Sunday, February 25, 2024
Home » சின்னமம்மிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதை கண்டு சேலம் கோஷ்டி திகைத்துப் போயிருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சின்னமம்மிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதை கண்டு சேலம் கோஷ்டி திகைத்துப் போயிருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

by Ranjith

‘‘பார்டர்ல பாட்டிலு விவகாரம் என்ன…’’ என்று கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘அருவிகள் குழுமியிருக்கிற மாவட்டத்துல குத்தாலத்துல தண்ணீ கொட்டற மாதிரி மது விற்பனையில பணமும் அமோகமா கொட்டுதாம். அதிலேயும் கேரள பார்டர்ல செங்கோட்டை மதுபான கடைக்கு பணி செய்யறதுக்கு ஊழியர்கள் மத்தியில கடுமையான போட்டி. சில சேல்ஸ்மேன்கள் 4 வருஷம், 5 வருஷமா அந்த கடைய விட்டு, வேற கடைக்கு போறதுக்கே இஷ்டமில்லாம அல்வா மாவட்டத்து உயர் அதிகாரிகளிடம் கெஞ்சி கூத்தாடி துண்ட விரிச்சி இடத்த பிடிக்கிறது சகஜமாகி வருகிறது.

கடைக்கு வர்றவங்க கிட்ட பாட்டிலுக்கு 10 ரூபா, 20 ரூபா கூட வச்சி கேட்கிறதுனாலே, குடிமகன்களுக்கு விழி பிதுங்குது. எங்க போனாலும் புகார் பண்ணுங்க, சரக்கு நாங்க தான் தரணும் என வாடிக்கையாளர்களை வசை மாறி பொழியும் ஊழியர்களால் போதை தெளிந்த குடிமகன்கள், இப்போது ஊழியர்களை மாற்றக் கோரி உயரதிகாரியிடம் மன்றாடி வருகின்றனராம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘சின்னமம்மி கோஷ்டி திடீர் மகிழ்ச்சியில் இருக்குது போல..’’ என சிரித்தார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சி ஒன்றாகணும் என்பதில் சின்னமம்மி தீவிரமா இருக்காங்களாம். இதற்காக யாரைப்பற்றியும் வாய் திறக்காம அப்படியே வருவதும் போவதுமாகவே இருந்து வர்றாராம்.

எந்த கொஸ்டீனை கேட்டாலும் நல்லதே நடக்குமுன்னு வேதவாக்கு சொல்லிட்டு வண்டி ஏறிடுவாராம். அதே நேரத்தில் இவரிடம் கைகட்டி சேவகம் செஞ்ச மாஜிக்கள் எல்லாம் ஓடிய நிலையிலும், விரல் விட்டு எண்ணும் வகையில் இருக்கும் தீவிர விசுவாசிகள், எங்களுக்கும் ஒருநாள் கதவு திறக்குமுன்னு சொல்லிக்கிட்டிருக்காங்க. இந்தநிலையில்தான் அவர்களுக்கு நெஞ்சில் பால் வார்த்ததுபோன்ற ஒரு நற்செய்தி கிடைச்சிருக்காம். டெல்லி தாமரையின் கடைக்கண் பார்வை கிடைக்காதா என்றிருந்த சின்னமம்மிக்கு ராமர் கும்பாபிஷேகத்துல கலந்துகொள்ள அழைப்பு வந்திருக்காம். இதனால அவரது அடிப்பொடிகள் ெராம்பவே ஹேப்பியா இருக்காங்களாம்.

இலைக்கட்சி தலைவர் வெளியேறிட்டார். சின்னமம்மி, தேனி மற்றும் குக்கர்காரர்களை ஒன்றிணைத்து மம்மி தலைமையில் நல்லது நடக்கும். அதுவும் இந்த ராமர் அழைப்பிதழில் இருந்து ஆரம்பமாகப் போவதாக கூறி மகிழ்ச்சியில திளைக்கிறாங்க. இலையை முடக்கி, இழுபறியில விட்டு சிக்க வைச்சிடுவாங்களோ, அப்படி ஏதாவது நடந்திருமோன்னு இலைக்கட்சி தலைவர் கோஷ்டியினர் இப்போ திகைப்புல இருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘காட்டன் ஆட்டம் நடத்த காக்கிகளே ஆள் தேடுறாங்கனு புகார் வருதே.. என்னா விஷயம்..’’ என ஆர்வத்துடன் கேட்டார் பீட்டர் மாமா.

‘‘குயின்பேட்டை மாவட்டத்தில் 2 சப்டிவிஷன்ஸ் இருக்குது. இதுல குயின்பேட்டை மாவட்டத்துல இருக்குற முக்கிய நகரங்கள்ல காட்டன் அமோகமா நடக்குதாம். சம்மந்தபட்ட காக்கிகள் நிலையத்திற்கு, அந்த கும்பல் கிட்ட இருந்து மாதம்ேதாறும் கொடுக்க வேண்டியது கரெக்ட்டா போய் சேர்ந்துடுதாம். இதனால குயின்பேட்டை மாவட்டத்துல எந்த தடையும் இல்லாம காட்டன் ஆட்டம் அமோகமா நடந்து வருதாம். இதனால அந்த கும்பல் மேல எந்த கேசும் போடுறது இல்லையாம். பொங்கல் பண்டிகைக்கும் ஸ்டார் காக்கிகள் முதல் அனைத்து காக்கிகளுக்கும் காட்டன் ஓனர்ஸ் சிறப்பாக கவனிச்சாங்களாம். இது நல்லபடி போய்கிட்டிருக்குற நேரத்துல, இப்ப புதுசா 3 சீட்டு நடத்த காக்கிகளே ஆள் தேடிவர்றாங்களாம்.

அதுலயும் ஒரு வேட்டைய தொடங்கலாம்னு காக்கிகள் முடிவு செஞ்சிருக்குறதாக புகார்கள் எழுந்திருக்குது. இதனால மாவட்டத்தோட உயர் காக்கி களத்துல இறங்கி காட்டன் ஆட்டத்தை தடுத்து, காக்கிகள் ஆட்டத்தையும் தடுக்கணும்னு கோரிக்கை எழுந்திருக்குது..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தேனிக்காரருக்கு சோதனை மேல் சோதனையா நடக்குதாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘சோதனை தீரவில்லை… சொல்லி அழ யாருமில்லை என்ற பாட்டு யாருக்கு பொருந்துதோ, இல்லையோ தேனிக்காரருக்கு ரொம்பவே பொருந்தும்.

அவரது சொந்த ஹனிபீ மாவட்டத்தில், அவரது ஆதரவாளர்கள் சிலர் செய்யும் அட்ராசிட்டி தாங்க முடியவில்லையாம். ஏற்கனவே, மாவட்டத்தில் பலர் சேலத்துக்காரர் பக்கம் சென்று விட்டனர். இந்த சூழலில் உடனிருப்பவர்கள், ஏதாவது செய்து தன்னை சிக்கலில் மாட்டி விடுகின்றனரே என நெருக்கமானவர்களிடம் புலம்பி வருகிறாராம் தேனிக்காரர். என்ன மேட்டர்னு விசாரிச்சா, சமீபத்தில் இலைக்கட்சி நிறுவன தலைவரது பிறந்தநாள் விழா நடந்தது. இதில் பிக்பாண்ட் ஊர்ல இலைக்கட்சி சார்பில் கொடியேற்றும் நிகழ்வு இருந்தது.

இதற்காக அங்கு தேனிக்காரர் அமைத்த கொடிக்கம்பத்துல, இலைக்கட்சி மாசெ, முன்னாள் எம்பி உள்ளிட்டோர் இலைக்கட்சி கொடியை தயார் செய்து ஏற்றுவதற்காக காத்திருந்தனர். உணர்ச்சி வசப்பட்டு அந்த கொடியை தேனிக்காரரின் ஆதரவாளர்கள் ஏத்திட்டாங்க… இதனால இரு தரப்புக்கும் அடிதடி நடந்து பிரச்னை பரபரப்பாச்சு… கொடிக்கம்பத்தை உடைக்க வேற இலைக்கட்சிக்காரங்க ரெடியாக இருந்தாங்க… அமைதியாக நடத்த வேண்டிய விழாவை, அடிதடியாக நடத்தியதால் தேனிக்காரருக்கு மாவட்டத்தில் பயங்கர கெட்ட பெயராம்.

கொடிக்கம்பத்தை தேனிக்காரர் இலைக்கட்சியில் இருந்தபோதுதானே கொண்டு வந்தார்? அந்த கொடிக்கம்பத்தை இப்போது எப்படி சொந்தம் கொண்டாடலாம்? எங்கள் கொடியை அவரது ஆதரவாளர்கள் எப்படி ஏத்தலாம்? நீதிமன்ற உத்தரவை மீறலாமா என இலைக்கட்சி முக்கிய நிர்வாகிகள் தற்போது வரை காட்டமாக பேசி வருகின்றனர். இதை அறிந்த தேனிக்காரர், ‘எங்கிட்டு போனாலும் ஜாம் ஆகுதே… கொஞ்ச நாள் சர்ச்சைக்குரிய விஷயத்துல சிக்காம இருங்கப்பா… முடியலை…’ என கூறி வருகிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா.

You may also like

Leave a Comment

18 − one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi