சென்னை: தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் இருந்து சென்னை உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்ய நீதிபதி சுரேந்தர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று காலை 10.15 மணிக்கு பதவி ஏற்றார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர் ராம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதவி பிரமாணம் செய்து வைத்தார். நீதிபதி சுரேந்தர் 1968ல் தெலங்கானா மாநிலம் மெகபூப் நகரில் பிறந்தார். ராமந்தப்பூரில் உள்ள ஐதராபாத் பப்ளிக் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்து உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் மண்ணியலில் பட்டப்படிப்பை முடித்தார்.
பதலராமரெட்டி சட்ட கல்லூரியில் சட்டம் படித்து 1992ல் ஆந்திரா பார்கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்து வழக்கறிஞர் தொழிலை தொடங்கினார். கிரிமினல் வழக்குகளில் நிபுணத்துவம் பெற்ற இவர் அமலாக்கத்துறை, சிபிஐ சிறப்பு வழக்கறிஞராக ஆஜராகியுள்ளளார். கடந்த 2022ல் தெலங்கானா உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக பதவியேற்றார். தற்போது சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.