ஐதராபாத்: தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் பிரசாரத்தை முலுகு நகரில் காங்கிரஸ் எம்.பி ராகுல், கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா நேற்று தொடங்கி வைத்தனர். இதையொட்டி, விஜயபேரி யாத்திரை என்ற பஸ் பிரசார பயணத்தை இருவரும் துவக்கினர். வழி நெடுக கூடியிருந்த மக்கள் மத்தியில் அவர்கள் காங்கிரசுக்கு வாக்கு சேகரித்தனர். பின்னர், முலுகுவில் நடந்த பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பாஜ, பிஆர்எஸ், மஜ்லிஸ் கட்சிகள் ஒன்றிணைந்து காங்கிரசை தோற்கடிக்க முயற்சிக்கின்றனர் என்று குற்றம்சாட்டினர். முன்னதாக ராமப்பா கோயிலில் ராகுல், பிரியங்கா சாமி தரிசனம் செய்தனர்.