புதுடெல்லி: தெலங்கானா சட்டப்பேரவையின் 119 தொகுதிகளுக்கான தேர்தல் நவம்பர் 30ல் நடக்கிறது. கடந்த 15ம் தேதி காங். 55 வேட்பாளர் அடங்கிய முதல் பட்டியலை வெளியிட்டது. டெல்லியில் நேற்று முன்தினம் நடந்த காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு கூட்டத்தில் இரண்டாவது பட்டியலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி, 45 வேட்பாளர்கள் அடங்கிய 2வது பட்டியல் நேற்றிரவு வெளியிடப்பட்டது. இதில், இந்திய அணியின் மு்ன்னாள் கிரிக்கெட் கேப்டன் முகமது அசாருதீன் ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.