ஹைதராபாத்: தெலங்கானாவில் புஷ்பா பட பாணியில் கஞ்சா கடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சங்கரெட்டி மாவட்டத்தில் கஞ்சா கடத்துவதாக வந்த ரகசிய தகவலையடுத்து கன்கோல் சோதனைச் சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது போலீசார் கண்ணில் எந்தப் பொருளும் சிக்கவில்லை.
இருந்தும் கார் ஓட்டுநர் மீது சந்தேகம் வழுத்ததால், காரின் இருக்கைகளை எடுத்து பார்த்தபோது, அதில் ரகசிய அறைகள் அமைத்து 83 கிலோ கஞ்சா கடத்தப்பட்டது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.33 லட்சம் என தெரிவித்துள்ள போலீசார், இவை அனைத்தும் ஆந்திரா-ஒடிசா எல்லை மலை கிராமத்தில் இருந்து மகாராஷ்டிராவுக்கு கடத்தப்பட இருந்ததாக கூறினர்.