திருமலை: தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற தெலங்கானா முதல்வர் மகள் கவிதாவின் காரில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் சோதனை செய்தனர். தெலங்கானா மாநிலத்தில் வருகிற 30ம்தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் பாரதிய ராஷ்டிரிய சமிதி(பிஆர்எஸ்) கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் சந்திரசேகரராவ் பெத்தப்பள்ளி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
முதல்வர் பயணம் செய்யும் கேரவேனை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர். இதேபோல், தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக நிஜாமாபாத்தில் பயணம் செய்த பிஆர்எஸ் எம்எல்சியும், சந்திரசேகரராவின் மகளுமான கவிதாவின் காரை தேர்தல் ஆணைய அதிகாரிகள் பாதி வழியில் நிறுத்தி சோதனை செய்தனர்.