திருமலை: ஆந்திர மாநில முதல்வரின் தங்கை சர்மிளாவின் ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சி காங்கிரசுடன் கூட்டணி சேர முயற்சித்தது. ஆனால் கடைசிவரை சர்மிளாவை காங்கிரஸ் கண்டுகொள்ளவில்லை. இதனால் கடும் மன உளைச்சல் அடைந்த சர்மிளா 119 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து தேர்தல் பணியை தொடங்கினார். தனது கட்சிக்கு பொது சின்னம் கோரி தேர்தல் ஆணையத்திடம் சர்மிளா முறையிட்டிருந்தார். அதன்படி நேற்று முன்தினம் அவரது கட்சிக்கு ‘பைனாகுலர்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. ஆனால் அந்த சின்னத்தை சர்மிளா விரும்பவில்லை. தங்களுக்கு ஏர் உழும் விவசாயி சின்னம் அல்லது பாம்பு புற்று சின்னம் ஆகிய 2ல் ஒன்றை ஒதுக்க வேண்டும் என்று சர்மிளா விரும்புவதாக தெரிகிறது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் நேற்றுமுன்தினம் அவர் முறையிட்டுள்ளார்.