தெலங்கானா: தெலங்கானாவின் ஷங்கர்பள்ளி ரயில்வே கேட் தண்டவாளத்தில் தாறுமாறாக கார் ஓட்டிய பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண் தண்டவாளத்தில் வேகமாக காரை ஓட்டி வந்தார். அப்போது பெங்களூரில் இருந்து ஐதராபாத் நோக்கி வந்துகொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலின் லோகோ பைலட்டை எச்சரிக்கை செய்து ரயிலை நடு வழியிலேயே நிறுத்தினர்.
அதன் பின் ரயில்வே ஊழியர்கள், பொது மக்களுடன் இணைந்து காரை நிறுத்தி அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் இருந்து வெளியே அழைத்து வந்தனர். பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்த அந்த பெண்ணை கைது செய்தனர். அந்த பெண்
குடிபோதையில் உள்ளாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.