தெலுங்கானா: தெலுங்கானாவில் மின் கம்பியில் விநாயகர் சிலை உரசி விபத்துக்குள்ளானதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஜகத்தியாலா மாவட்டம் கோட்டூர்லாவில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை செய்யப்பட்டது. அச்சிலையை தூக்கி கொண்டு குடோனுக்கு செல்லும் போது சிலையின் ஒரு பகுதி சாலையில் உள்ள மின் கம்பி மீது உரசி தீப்பிடித்தது.
இதனை கண்ட அப்பகுதி மக்கள் கட்டை மூலம் மின் கம்பியை உயர்த்தி பிடித்து மின் இணைப்பை தடுத்து *9 பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்ததில் அல்வாலா வினோத், ஊழியர் நெலுட்லா பண்டி ஆகியோர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். இத்தகைய விபத்தில் பாதிக்கப்பட்ட 7 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.