ஐதராபாத்: தெலுங்கானா மாநிலம் பத்ராத்ரி கோத்தகுடம் மாவட்டத்தில் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடெம் மாவட்டத்தில் உள்ள ரகுநாத்பள்ளி வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் மறைந்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலை அடுத்து இன்று காலை போலீசார் நடத்திய சோதனையில் அங்கு மறைந்திருந்த மாவோயிஸ்டுகள் போலீசார் மீது துப்பாக்கிசூடு நடத்தினர்.
பதிலுக்கு போலீசாரும் மாவோயிஸ்டுகள் மீது தூப்பாக்கிசூடு நடத்தினர். இந்த துப்பாக்கிசூட்டில் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மாவோயிஸ்டுகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பாதுபாப்பு படை வீரர்கள் காயமடைந்தனர். மேலும், மாவோயிஸ்டுகள் பயன்படுத்திய ஏராளமான எஸ்எல்ஆர் துப்பாக்கிகள், 303 ரைபிள்கள் மற்றும் 315 போர் ரைபிள்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் தெரியவந்துள்ளது. துப்பாக்கிசூடு நடைபெற்ற பகுதியில் மேலும் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருக்கலாம் என்ற கோணத்தில் தொடர்ந்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.