திருவாரூர், ஜூலை 31: தெலங்கானாவில் முதல்வர் ஆதரவு இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக பணியாற்றி வருகிறேன் என்று திருவாரூரி்ல் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று கூறினார்.திருவாரூரில் நேற்று நடந்த தனியார் விழாவில் பங்கேற்ற தெலங்கானா மாநில ஆளுநரும், புதுவை மாநில துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் நேற்று இரவு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,புதுவை மாநிலத்தில் தகுதியான மகளிர்க்கு உரிமை தொகை வழங்கும் விரிவுபடுத்தப்பட்ட திட்டம், முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் மற்றும் காஸ் சிலிண்டருக்கான ரூ.300 மானியம் வழங்கும் திட்டம் என முப்பெரும் விழா நாளைய தினம் (இன்று 31ம் தேதி) நடைபெறுகிறது.