தெலுங்கானா: தெலுங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் நிகழ்ந்த விபத்துக்கு பாய்லர் வெடித்தது காரணமல்ல என சிக்காச்சி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. தெலுங்கானாவில் சங்கரெட்டி மாவட்டத்தின் பதஞ்சேரு பகுதியில் பாஷ்மிலராம் தொழிற்பேட்டை உள்ளது. இங்கு, ஷிகாச்சி நிறுவனத்தின் ரசாயன தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதில், 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்று முன்தினம் பணியில் இருந்தபோது, அங்கிருந்த உலை ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் 100 மீட்டருக்கு மேல் தூக்கி வீசப்பட்டனர்.
அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் பதறியபடி வெளியேறினர். எனினும், உலையின் அருகே இருந்த தொழிலாளர்கள் பலர் இந்த விபத்தில் சிக்கினர். தீயணைப்பு வீரர்கள் நீண்டநேரம் போராடி தீயை அணைத்தனர். இதையடுத்து, உள்ளே சிக்கிய தொழிலாளர்களை மீட்க, இரண்டு தீத்தடுப்பு ‘ரோபோ’க்களுடன் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுக்கள் ஈடுபட்டன. அப்போது தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, 33 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. இன்னும் பலர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து பலி எண்ணிக்கை 41 ஆக உயிரிழந்த நிலையில், நிலையில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், தெலுங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் நிகழ்ந்த விபத்துக்கு பாய்லர் வெடித்தது காரணமல்ல என சிக்காச்சி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. ஆலை விபத்தில் இறந்தவர்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும். விபத்தை அடுத்து ரசாயன ஆலை 3 மாதம் தற்காலிகமாக மூடப்படும் என சிக்காச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.