பெரம்பூர்: நேபாளத்தை சேர்ந்தவர் மகாப் கணால் (29). பாடி மண்ணூர்பேட்டை பகுதியில் தங்கி, கட்டிட வேலை செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு பெரம்பூர் ரயில் நிலையம் அருகே நடந்து சென்றபோது, அங்கு வந்த 3 பேர், இவரை வழிமறித்து மது அருந்த பணம் கேட்டுள்ளனர். இவர் பணம் இல்லை என்று கூறியதால் ஆத்திரமடைந்த அவர்கள், மறைத்து வைத்திருந்த பிளேடை எடுத்து கணால் கழுத்தை அறுத்துவிட்டு, அவரது பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.4500 மற்றும் செல்போனை பறித்து சென்றனர். படுகாயமடைந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பெற்று, இதுகுறித்து செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.