மதுரை: வைகையாற்றில் அழகர் இறங்கும் திருவிழா நேற்று காலை நடந்தது. அதிகாலை 3.30 மணிக்கு பக்தர்கள் வெள்ளத்தில் மதிச்சியம் ஆர்.ஆர். மண்டபம் அருகே ஒரு வாலிபர் நின்று கொண்டு இருந்தார். அந்த வாலிபரை குறிவைத்து அங்கு வந்த 10 பேர் கொண்ட கும்பல் அவரை விரட்டிச் சென்றது. கீழே விழுந்தவரை கழுத்து நெரித்தும், சரமாரியாக கத்தியால் குத்தியும் கொலை செய்து விட்டு, கூட்டத்தோடு கூட்டமாக தப்பி ஓடியது. அங்கிருந்த டீக்கடை மற்றும் கடைகளை சூறையாடினர். தட்டிக்கேட்ட டீக்கடைக்காரர் குரு என்பவரையும் கும்பல் தாக்கி விட்டு தப்பி ஓடியது. போலீஸ் விசாரணையில், கொலையானவர் மதுரை ஜெய்ஹிந்த்புரம், எம்.கே புரத்தை சேர்ந்த சூர்யா (24) என தெரிந்தது. மதிச்சியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வாலிபரை கொலை செய்த கும்பலை தேடி வருகின்றனர்.
வாலிபர் சரமாரி குத்தி கொலை
139