தண்டையார்பேட்டை: ராயபுரம் மேற்கு மாதா கோயில் தெருவில் நேற்று முன்தினம் மாலை வாலிபர் ஒருவர் கையில் கத்தியை வைத்துக்கொண்டு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டுக்கொண்டு இருந்தார். தகவலறிந்து வந்த ராயபுரம் போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தபோது, அவர் ராயபுரம் பிச்சாண்டி சந்தைச் சேர்ந்த பூபாலன் (22) என்பது தெரிய வந்தது.
ஏசி மெக்கானிக்காக வேலை செய்து வரும் இவர், இன்ஸ்டாகிராமில் அடிக்கடி வீடியோ எடுத்து ரீல்ஸ் போடுவது வழக்கம். இதற்காக அவர் கத்தியை வைத்து வீடியோ எடுத்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து ராயபுரம் போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.