தண்டையார்பேட்டை: சென்னையில் கூவம் ஆற்றை தூர்வாரும் பணிக்காக, கடந்த 2012ம் ஆண்டு ஒசுரை சேர்ந்த தர்மலிங்கம் (21) என்பவர் சென்னை வந்துள்ளார். அபோது, வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த திருமணம் ஆன 20 வயது இளம்பெண்ணை வீடு புகுந்து இவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வண்ணாரப்பேட்டை போலீசார் தர்மலிங்கத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தர்மலிங்கம் இளம்பெண்ணை பலாத்காரம் செய்தது உண்மை என தெரியவந்தது. அதன்பேரில் இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. அதில், இளம்பெண்னை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் வழங்கப்பட்டது. மேலும், அபராத தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 8 மாத சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும், என நீதிபதி தீர்ப்பளித்தார்.