லக்னோ: உத்தரபிரதேச வாலிபரை மொட்டையடித்து வாயில் சிறுநீர் விட்ட 5 திருநங்கைகளை போலீசார் கைது செய்தனர். உத்தரபிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் மாவட்டம் இமாம்பக்ஷ் பகுதியை சேர்ந்த சமையல்காரர் ரபிகுல் (30) என்பவர், கஸ்கஞ்சிலிருந்து அவரது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். ஜோஹ்ரி செங்கல் சூளை அருகே திடீரென அவரை சூழ்ந்து கொண்ட கும்பல், ரபிகுல்லை சரமாரியாக அடித்து உதைத்தது. பின்னர் அவரது தலையை தண்ணீரால் நனைத்து மொட்டையடித்தனர். அழுதுகொண்டிருந்த ரபிகுலின் வாயை பிளந்து அந்த கும்பல் சிறுநீர் கழித்தது.
பின்னர் அவரிடமிருந்த ரூ.1,000 பணத்தையும் கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதையடுத்து சஹாவர் ேபாலீசார், பாதிக்கப்பட்ட ரபிகுலிடம் விசாரணை நடத்தினர். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ரபிகுலை மொட்டையடித்து, அவரது வாயில் சிறுநீர் கழித்த 5 திருநங்கைகளை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.