ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் தொழிற்சாலை விடுதியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனார். புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் தேவிகா (26). இவர், காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு பணிக்கு சேர்ந்த தேவிகா தொழிற்சாலை வளாகத்திலேயே உள்ள தங்கும் விடுதியில் தன்னுடன் பணியாற்றும் சக தோழிகளுடன் தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் சக தோழிகள் பணிக்கு சென்ற நிலையில் தேவிகா மட்டும் அறையில் தனியாக இருந்துள்ளார். சக தோழிகள் வேலை முடிந்து அறைக்கு வந்து பார்த்தபோது, தேவிகா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சுங்குவார்சத்திரம் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
previous post