பொன்னேரி: பொன்னேரி அருகே தனியார் நிறுவனத்தில் வேலை செய்த இளம் பெண் மாயமாகி உள்ளார். பொன்னேரி அடுத்த திருப்பாலைவனம் பிரளயம்பாக்கம் கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி(50). விவசாயி. இவரது மகள் ஷாலினி(21). சோழவரம் பகுதியில் உள்ள நிப்பாட்டி கம்பெனியில் வேலை செய்தார். கடந்த 15ம் தேதி வேலைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
எனவே, நண்பர்கள், உறவினர்கள் வேலை செய்யும் பகுதிகளுக்கும் சென்று விசாரித்துள்ளனர். இதில், கிடைக்காததால் தந்தை முனுசாமி திருப்பாலைவனம் போலீசில் நேற்றுமுன்தினம் புகார் செய்தார். இது குறித்து எஸ்ஐ வெங்கடேசன் வழக்கு பதிவு செய்து, காணாமல் போன இளம் பெண் கடத்தப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து தேடி வருகிறார்.