சென்னை: திருவல்லிக்கேணி பாலமுரளி தெரு, எல்.எஸ்.சாலையை சேர்ந்தவர் வின்சென்ட் (19). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு, கடந்த 2021ம் ஆண்டு தாம்பரத்தை சேர்ந்த பிளஸ் 2 மாணவியுடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. இந்நிலையில், வின்சென்ட் மாணவியை பம்மலில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்று, ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்துள்ளார். பின்னர், அந்த மாணவியிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். மேலும், தனது செல்போன் எண்ணை மாற்றிவிட்டு தலைமறைவானார்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிந்து, ஆந்திரா அருகே பதுங்கியிருந்த வின்சென்டை நேற்று போக்சோ சட்டத்தில் கைது செய்து, தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.