வாஷிங்டன்: அமெரிக்கா விதித்த வரி தொடர்பாக கடந்த வாரம் ஜி7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கனடா சென்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் வர்த்தக பேச்சுவார்த்தைகளை முடிப்பதற்கு 30 நாட்கள் காலக்கெடு நிர்ணயித்துள்ளதாக தெரிவித்து இருந்தார். இந்நிலையில் கனடா உடனான பேச்சுவார்த்தையை நிறுத்துவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அதிபர் டிரம்ப், தனது சமூக வலைதள பதிவில்,
‘‘கனடாவில் ஆன்லைன் பயனர்களுடன் ஈடுபடும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு டிஜிட்டல் சேவை வரியை கனடா அறிவித்துள்ளது. இந்த வரி திங்களன்று அமலுக்கு வருகின்றது. இந்த மோசமான வரியின் அடிப்படையில் கனடா உடனான வர்த்தகம் குறித்த அனைத்து விவாதங்களையும் உடனடியாக முடிவுக்கு கொண்டு வருகிறோம். அடுத்த 7 நாட்களுக்குள் அமெரிக்காவுடன் வணிகம் செய்வதற்கு அவர்கள் செலுத்த வேண்டிய கட்டணம் குறித்த கனடாவுக்கு தெரியப்படுத்துவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.