Friday, March 1, 2024
Home » புழல் ஒன்றிய தேமுதிக சார்பில் விஜயகாந்த்துக்கு கண்ணீர் அஞ்சலி: முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு

புழல் ஒன்றிய தேமுதிக சார்பில் விஜயகாந்த்துக்கு கண்ணீர் அஞ்சலி: முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு

by Ranjith

புழல்: புழல் ஒன்றிய தேமுதிக சார்பில், விஜயகாந்த்துக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சி தலைவர்கள், விஜயகாந்த் உடன் சேர்த்து நடித்த நடிகர்கள் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் புழல் ஒன்றிய தேமுதிக சார்பில், செங்குன்றம் அடுத்த தீர்த்தங்கரையம்பட்டு ஊராட்சியில் தேமுதிக புழல் ஒன்றிய பொருளாளர் ஸ்மைல் ரஞ்சித் தலைமையில் அக்கட்சியினர் விஜயகாந்த் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். இதேபோல் மாதவரம் மேற்கு தேமுதிக சார்பில், பகுதி செயலாளர் புழல் நாகராஜ் தலைமையில், புழல் மத்திய சிறைச்சாலை அருகிலுள்ள ஜிஎன்டி சாலையில் இருந்து அக்கட்சியினர் மவுன ஊர்வலமாக புழல் அம்பேத்கர் சிலை வரை விஜயகாந்த் பேனர் ஏந்தி சென்றனர். இதில் நிர்வாகிகள் செல்வகுமார், லட்சுமணன், தமிழ்மாரி, சுதா, ஈஸ்வரி, கோமதி மற்றும் மகளிர் அணியினர் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

You may also like

Leave a Comment

two + six =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi