ஊட்டி: குன்னூர் அருகே கோட்டக்கல் பகுதியில் தனியார் தேயிலை தோட்டத்தில் இருந்த 12 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினர் மீட்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.குன்னூர் அருகே கோட்டக்கல் பகுதியில் தனியார் தேயிலை தோட்டத்தில் மலை பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதாக அப்பகுதி தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனைதொடர்ந்து, வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, தேயிலை தோட்டத்தில் 12 அடி நீள மலைப்பாம்பு ஒன்று இருப்பது தெரியவந்தது. அந்த மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்து, கொலக்கொம்பை பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதிகளுக்குள் கொண்டு சென்று விடுவித்தனர். இது குறித்து வனத்துறையினர் கூறுகையில்,‘கோட்டக்கல் தேயிலை தோட்டத்தில் 12 நீளம் உள்ள மலைப்பாம்பு இரையை உட்கொண்டு, அங்கிருந்து செல்ல முடியாமல் இருந்தது. இதனை பிடித்து அருகில் உள்ள காட்டிற்குள் கொண்டு சென்று விடப்பட்டது. எனவே, பொதுமக்கள் மற்றும் தோட்ட தொழிலாளர்கள் அச்சம் கொள்ள வேண்டாம்’ என்றனர்.