கொழும்பு: ஆசியக்கோப்பை சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 228 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 356 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி 128 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்து பரிதாபமாக தோல்வியடைந்தது.