2025ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ேடானி போன்ற ஓய்வுபெற்ற சர்வதேச வீரர்களை ‘அன்கேப்’ வீரர்களாக விளையாட அனுமதிக்கும் விதியை பிசிசிஐ மீண்டும் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. முன்பு, இந்த விதி இருந்தது, ஆனால் பயன்படுத்தப்படவில்லை. தற்போது அதை மீண்டும் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
ஏலத்திற்கு முன் ஒரு வீரரை தக்க வைக்கவேண்டுமெனில் குறைந்தபட்சம் ரூ.12 கோடி வழங்க வேண்டும். இந்த தொகைக்கு டோனியை தக்க வைத்தால் , ஏலத்தில் சிறந்த வீரர்களை எடுப்பது பாதிக்கப்படும். ஆனால் இந்த புதிய விதியின் கீழ் டோனியை தக்க வைக்க ரூ.4 கோடி போதும். இதனால் 43 வயதான டோனி சிஎஸ்கே அணிக்காக மேலும் ஒரு சீசனில் ஆடலாம் என தெரிகிறது.