Tuesday, July 16, 2024
Home » ராணுவப் பள்ளியில் ஆசிரியர்,லேப் அசிஸ்டென்ட்

ராணுவப் பள்ளியில் ஆசிரியர்,லேப் அசிஸ்டென்ட்

by Porselvi
Published: Last Updated on

இந்திய ராணுவத்தின் கீழ் ராஜஸ்தானில் இயங்கி வரும் சைனிக் பள்ளியில் ஆசிரியர், லேப் அசிஸ்டென்ட் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் விவரம்:

1. Post Graduate Teachers: 8 இடங்கள். வயது: 21 லிருந்து 40க்குள். சம்பளம்: ரூ.71,400. தகுதி: English/Chemistry/Physics/ Biology/Maths/Computer Science ஆகிய ஏதாவதொரு பாடத்தில் 55% மதிப்பெண்கள் பெற்று முதுநிலைப் பட்டம் தேர்ச்சியுடன் பி.எட்., முடித்திருக்க வேண்டும். இந்தி மற்றும் ஆங்கிலத்தில் கற்பிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
2. Nursing Sister (Female): 1 இடம். வயது: 18 லிருந்து 50க்குள். சம்பளம்: ரூ.38,250/-. தகுதி: ஜெனரல் நர்சிங் பிரிவில் டிப்ளமோ /இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். படிப்பை நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. Laboratory Assistant: 3 இடங்கள். வயது; 18 முதல் 50க்குள். சம்பளம்: ரூ.38,250/-. தகுதி: கணிதம்/அறிவியல் பாடங்களில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று லேப் அசிஸ்டென்ட் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் எம்எஸ் ஆபீசில் அறிவுத் திறன் பெற்றிருக்க வேண்டும்.

கட்டணம்: பொது/ ஒபிசியினருக்கு ரூ.500/-. எஸ்சி/எஸ்டி யினருக்கு ரூ.250/-. இதை ஆன்லைனில் செலுத்தவும்.

விண்ணப்பிக்கும் முறை,தேர்வுமுறை உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு www.ssjhunjhunu.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.06.2024.

You may also like

Leave a Comment

8 − 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi