சென்னை: ஆசிரியர்களின் கோரிக்கைகளை சரிசெய்ய புதிய செயலி அறிமுகம் செய்யப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி அளித்துள்ளார். ஆசிரியர்களின் பிரச்னைகளுக்கு தொடக்க நிலையிலேயே தீர்வு காண திட்டம். ஆசிரியர்களுக்கு உள்ள குறைபாடுகளை களைய பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. புதிய செயலி மூலம் ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளை அரசுக்கு தெரிவிக்கலாம்