போபால்: மபி சட்டப்பேரவைக்கு வரும் 17ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் நரசிங்பூர் தொகுதியில் ஒன்றிய அமைச்சர் பிரகலாத் பட்டேல் பா.ஜ வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். நேற்று அவர் சிண்ட்வாரா தொகுதியில் இருந்து தனது தொகுதிக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது அமர்வாரா என்ற இடத்தில் அமைச்சரின் கார் அந்த வழியாக வந்த பைக் மீது மோதியது. இதில் பைக்கில் வந்த ஆசிரியர் நிரஞ்சன் சந்திரவன்சி பலியானார். அமைச்சர் உட்பட 4 பேர் காயம் அடைந்தனர்.