டெல்லி: விவசாயிகள் பாசனத்துக்காக பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. சோதனை முயற்சியாக பல்வேறு மாநில அரசுகளுடன் இணைந்து ஒன்றிய அரசு விரைவில் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் அம்மாநில அரசுகளுடன் இணைந்து திட்டத்தை செயல்படுத்த ஒன்றிய அரசு முடிவு எனத் தகவல் வெளியாகியுள்ளது. பாசன நீருக்கு எவ்வளவு வரி விதிக்க வேண்டும் என்பதை மாநில அரசுகள் முடிவு செய்யும். நீரை வீணடிப்பதையும் நீலத்தடி நீரை தவறாக பயன்படுத்துவதையும் தடுக்கும் வகையிலும் வரிவிதிக்கும் திட்டத்தை கொண்டுவர முடிவு என விளக்கம் அளித்துள்ளது. புதிய திட்டத்தின் கீழ் விவசாயிகள் போதிய நீரை பெறவும் பயன்படுத்தும் நீருக்கு ஏற்றவகையில் வரி விதிக்கவும் ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. பாசன நீருக்கு வரிவிதிக்கும் திட்டத்தை செயல்படுத்த ஒன்றிய அரசு ரூ.1,600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள் பயன்படுத்தும் தண்ணீருக்கு வரி விதிக்க திட்டம்
0