புதுடெல்லி: 2022-23ம் நிதியாண்டில் சுமார் ஒரு லட்சம் கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு நடைபெற்று இருப்பதாக நிதியமைச்சகம் கண்டறிந்து உள்ளது. ஒன்றிய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘நடப்பு நிதி ஆண்டில் கடந்த ஆறு மாதத்தில் நடந்த வரி ஏய்ப்பு, கடந்த ஆண்டை விட அதிகமாகி உள்ளது. ஒட்டுமொத்தமாக 2023-24ம் நிதி ஆண்டில் ரூ.1.36 லட்சம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்துள்ளது.
ஏப்ரல் 2020 முதல் செப்டம்பர் 2023 வரை 57 ஆயிரம் கோடிக்கும் மேல் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்த 6,000க்கும் மேற்பட்ட போலி ஐடிசி வழக்குகளை இன்று வரை கண்டறிந்துள்ளது. அவற்றில் சம்பந்தப்பட்ட 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நடப்பு நிதியாண்டில் மட்டும் இதுவரை மொத்தம் 91 மோசடியாளர்கள் பிடிபட்டனர்’ என்று தெரிவித்துள்ளது.