சென்னை: வயநாட்டு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாநில பொதுச்செயலாளர் ஏ.முஜிபுர் ரஹ்மான், மாநில பொருளாளர் ஏ.இப்ராஹிம் ஆகியோர் கலந்து கொண்டு ரூ.5 லட்சத்திற்கு அதிகமான நிவாரணத் தொகையை நிலச்சரிவால் கலந்து கொண்ட குடும்பங்களுக்கு வழங்கினர். இந்நிகழ்வில் மாநில செயலாளர் சி.வி.இம்ரான் மற்றும் மாநில செயலாளர் ஏ.சித்திக் மற்றும் கோவை வடக்கு, நீலகிரி மாவட்ட மற்றும் கேரள மண்டல நிர்வாகிகளும் கலந்து கொண்டனர், மத, இன, பாகுபாடின்றி பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் முறையில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.