டாடா நிறுவனம் சமீபத்தில் ஹாரியர், சபாரி பேஸ்லிப்ட் கார்களை அறிமுகம் செய்திருந்தது. பேஸ்லிப்டுக்கு முன்பு அறிமுகமான ஹாரியர் மற்றும் சபாரியில் அடாஸ் தொழில் நுட்பம் இடம் பெற்றிருந்தது. விபத்தை தவிர்ப்பதற்கான எச்சரிக்கை, லேன் மாறும்போது எச்சரிக்கை செய்வது, அவசர காலத்தில் தானியங்கி பிரேக்கிங் போன்ற பல்வேறு அம்சங்கள் இதில் உள்ளன.
பேஸ்லிப்ட் காரில் எலக்ட்ரானிக் ஸ்டியரிங் உள்ளதால் மேற்கண்ட தொழில்நுட்ப வசதிகளை பேஸ்லிப்ட் கார்களிலும் சாப்ட்வேர் அப்டேட் மூலம் வழங்க உள்ளதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹைட்ராலிக் ஸ்டியரிங் அல்லாமல் எலக்ட்ரானிக் ஸ்டியரிங் கொண்ட கார்களுக்கு இந்த அப்டேட் கிடைக்கும் எனவும் நிறுவன தரப்பில் கூறப்பட்டுள்ளது.