சென்னை: டாஸ்மாக் பணியாளர் சங்கம் வெளியிட்ட அறிக்கை: முறை சாரா தொழிலாளர், கான்ட்ராக்ட் தொழிலாளர் மற்றும் திட்ட தொழிலாளர்கள் உள்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் தேசிய குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.26,000 வேண்டும். பல்வேறு திட்டங்கள் மற்றும் காரணங்களுக்காக அவுட்சோர்சிங், குறிப்பிட்ட கால வேலை பயிற்சியாளர், அப்ரண்டீஸ் போன்ற எந்த வடிவத்திலும் பணிகளை கேசுவல் மயமாக்க கூடாது. புதிய பென்ஷன் திட்டம், ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டம் ரத்து செய்ய வேண்டும், பழைய பென்ஷன் திட்டத்தை
திரும்ப அமல்படுத்த வேண்டும்.
போனஸ் பெறுவதற்கான ஊதிய வரம்பு கணக்கிடுவதற்கான ஊதிய வரம்பு, அதிகபட்ச போனஸ் சதவீதம் என அனைத்து வரம்புகளையும் அகற்ற வேண்டும், கருணைக்கொடை தொகையை உயர்த்த வேண்டும். பொதுத்துறை நிறுவனங்கள், அரசு துறைகளை தனியார் மயம் ஆக்குவதை நிறுத்த வேண்டும். தேசிய பணமாக்கல் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜூலை 9ம் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட உள்ளது.