தாம்பரம்: செங்கல்பட்டு – தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் ஊரப்பாக்கம் பகுதியில் புதிய டாஸ்மாக் கடை வர உள்ளதாக கூறப்படுகிறது. அப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைத்தால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படும் எனக் கூறி பொதுமக்கள் டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
ஆனாலும், அங்கு டாஸ்மாக் கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து நேற்று இரவு இருக்கும் மேற்பட்ட பெண்கள் ஜிஎஸ்டி சாலையில் சாலையோரம் நின்றபடி டாஸ்மாக் கடை அமைக்க கூடாது என வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.