சென்னை: டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. “எதன் அடிப்படையில் திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரிடம் விசாரிக்க முடிவு எடுக்கப்பட்டது? விக்ரமின் வீடு, அலுவலகத்திற்கு சீல் வைப்பதற்கு ED-க்கு என்ன அதிகாரம் இருக்கிறது ?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். 'சோதனை நடத்த சென்ற போது வீடு மற்றும் அலுவலகம் பூட்டியிருந்ததால் அதன் காரணமாக சீல் வைக்கப்பட்டது' அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுளளது.
Advertisement


