தஞ்சாவூர்: ஒரத்தநாடு அருகே வகுப்பறையில் 5 மாணவர்களின் வாயில் டேப் ஒட்டிய விவகாரம் தொடர்பாக 3 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அய்யம்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் 5 மாணவர்களின் வாயில் சக மாணவர்கள் டேப் ஒட்டியது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. கவனக்குறைவாக செயல்பட்ட தலைமை ஆசிரியை புனிதா, ஆசிரியைகள் முருகேஸ்வரி, பெல்சி ஸ்மாகுலேட் கிறிஸ்டி ஆகியோரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட கல்வி அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.
5 மாணவர்களின் வாயில் டேப் ஒட்டிய விவகாரம் : 3 ஆசிரியர்கள் பணியிட மாற்றம்
0
previous post