தஞ்சை: தஞ்சை மாவட்டத்தில் விண்ணமங்கலம் பகுதியில் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். ரூ.6லட்சம் மதிப்பில் 12கி.மீ. தொலைவிற்கு சி,டி பிரிவு வாய்க்காலில் தூர்வாரும் பணிகளை முதல்வர் ஆய்வு செய்கிறார். ஆலக்குடி முதலைமுத்துவாரி ஆற்றில் நடைபெறும் தூர்வாரும் பணியை ஆய்வு செய்தபின் விண்ணமங்கலத்தில் ஆய்வு செய்து வருகிறார். குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ல் நீர் திறக்கப்படுகிறது. கல்லணை முதல் கடைமடை வரை தடையின்றி நீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல்வருடன் அமைச்சர்கள், ஆட்சியர்கள், அரசு அதிகாரிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
தஞ்சை மாவட்டத்தில் விண்ணமங்கலம் பகுதியில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
147