Saturday, April 13, 2024
Home » தஞ்சை, பெரம்பலூரில் ரூ.16.81 லட்சம் பறிமுதல்: பறக்கும்படை அதிரடி சோதனை

தஞ்சை, பெரம்பலூரில் ரூ.16.81 லட்சம் பறிமுதல்: பறக்கும்படை அதிரடி சோதனை

by Mahaprabhu

திருச்சி: பறக்கும்படை அதிரடி சோதனையில் தஞ்சை, திருச்சியில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை ரூ.16.81 லட்சம் ரொக்கம் மற்றும் 240 உர மூட்டைகள், 5 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த 16ம் தேதி மாலை முதல் அமலுக்கு வந்தது. டெல்டா மாவட்டங்களில் வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள் பட்டுவாடாவை தவிர்க்க தேர்தல் பறக்கும் படையினர் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் முதல்நாளான நேற்று முன்தினம் டெல்டா மாவட்டங்களில் நடந்த சோதனையில் ரூ.18.90 லட்சம் ரொக்கம் மற்றும் பெரம்பலூரில் 71 அட்டை ெபட்டியில் இருந்த குத்துவிளக்கு உள்ளிட்ட 71 அட்டை பெட்டிகளில் பொருட்கள் பறிமுதல் செய்தனர். 2ம் நாளாக நேற்று ரூ.27.51 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று தஞ்சை மாவட்டத்தில் 25 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு வாகனங்கள் தீவிர சோதனை செய்யப்பட்டு வருகிறது.

ஒரத்தநாடு அருகே உள்ள மறுமலர் அரசு பள்ளி அருகே தேர்தல் பறக்கும் படையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தஞ்சை புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள செக் நல்லெண்ணெய் விற்பனை நிறுவன டிரைவர் பாலாஜி மற்றும் அவரது உதவியாளர் லோடு வாகனத்தில் கொண்டு வந்த 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை கூட்டுறவு சார்பதிவாளர் சித்திரவேல் தலைமையிலான அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதேபோல் தஞ்சை அருகே பிள்ளையார்பட்டியில் பறக்கு படை அதிகாரிகள் இன்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சரக்கு வாகனத்தில் உரிய ஆவணம் இன்றி சேலத்தில் இருந்து கும்பகோணத்திற்கு 240 உர மூட்டைகள் எடுத்துச் செல்லப்பட்டது. அதன் மதிப்பு 6 லட்சத்து 75 ஆயிரம் ஆகும்.

பறக்கும் படை அதிகாரி அஜய் ராஜ் தலைமையிலான அதிகாரிகள் சரக்கு லாரியுடன் உர முட்டைகளை பறிமுதல் செய்து தஞ்சை தாசில்தார் அருள் ராஜிடம் ஒப்படைத்தனர். இதேபோல் ஒரத்தநாடு அருகே புலவன்காடு தஞ்சை-பட்டுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் ஒரத்தநாடு கூட்டுறவு வங்கி சார்பதிவாளர் கவிதா தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே வந்த லோடு ஆட்டோவை மறித்து சோதனையிட்டபோது அதில் தஞ்சை கீழவாசலை சேர்ந்த வெங்கடேஷ்(26), சதீஷ்குமார்(29) ஆகியோர் 5.50 டன் ரேஷன் அரிசியை பட்டுக்கோட்டை அருகே உள்ள கொண்டு குளம் தனியார் கோழிப்பண்ணைக்கு கடத்திச் சென்றது தெரியவந்தது. தொடர்ந்து இருவரையும் பிடித்து, உணவு பாதுகாப்பு ஆய்வாளர் முருகானந்தத்திடம் ஒப்படைத்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த வாகனம் மற்றும் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி மாவட்டம் பூவாளூரில் லால்குடி-பாடாலூர் சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியே புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை சேர்ந்த அஜித்குமார் காரில் ஆவணங்களின்றி இருந்த ரூ.50,500 ரொக்கத்தை பறிமுதல் செய்து ஆர்டிஓ சிவசுப்ரமணியனிடம் ஒப்படைத்தனர். திருச்சி மன்னார்புரம் பேருந்து நிறுத்தம் அருகே நேற்று இரவு 11 மணிக்கு மணப்பாறையில் இருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்த லோடு ஆட்டோவை தேர்தல் பறக்கும் படையினர் நிறுத்தி சோதனையிட்டனர். இதில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ. 1 லட்சத்து 7 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். லோடு ஆட்டோவை ஓட்டி வந்த மணப்பாறையை சேர்ந்த சுதாகரனிடம் விசாரித்தனர். அவர் பழம் வியாபாரம் செய்து விட்டு எடுத்து வந்த பணம் இது என்று தெரிவித்தார். பெரமங்கலம் பகுதியில் நேற்று இரவு தேர்தல் பறக்கும் படை அலுவலர் வினோத்குமார் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

You may also like

Leave a Comment

20 − ten =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi