தஞ்சை: தஞ்சை ஆட்சியர் அலுவலகம் முன் ஆரூரான் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் கரும்புடன் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். சர்க்கரை ஆலை ரூ. 115கோடி நிலுவைத் தொகை தரவில்லை எனக் குற்றம்சாட்டி விவசாயிகள் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். திருமண்டக்குடி ஆரூரான் சர்க்கரை ஆலையை கண்டித்து விவசாயிகள் 248 நாட்களாக போராடி வருகின்றனர்.