தஞ்சாவூர்: தஞ்சையில் இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் பாப்பாநாடு பெண் எஸ்.ஐ. சூர்யா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூர் அருகே இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் 6 பேர் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்து இருந்த நிலையில் போலீசார் இதுவரை 4 பேரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் மீதமுள்ள இரண்டு பேரை கைது செய்து அதிகபட்ச தண்டனை பெற்று தரவும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிவாரணம் வழங்கிடவும் கோரி பாப்பாநாடு பகுதியை சேர்ந்த வணிகர்கள் 500க்கும் மேற்பட்டோர் தங்களது கடைகளை அடைத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். கஞ்சா மற்றும் போதைப்பொருளை அரசு கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் போராட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டன.
இந்நிலையில், இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் பாப்பாநாடு பெண் எஸ்.ஐ. சூர்யா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பெண் பாலியல் வழக்கு விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்ட பாப்பாநாடு காவல் உதவி ஆய்வாளர் சூர்யாவை பணியிடை நீக்கம் செய்து தஞ்சை சரக டிஜிபி ஜியாவுல் ஹக் உத்தரவிட்டுள்ளார்.