தஞ்சை: ஒரத்தநாடு அருகே பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. பாப்பாநாட்டில் இன்று காலை முதல் மாலை 4 மணி வரை கடையடைப்பு போராட்டமும், உண்ணாவிரத போராட்டமும் நடைபெறுகிறது. குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும் அப்பகுதியில் கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்த கோரியும் போராட்டம் நடைபெற்று வருகிறது.