மதுரை : தஞ்சை மாவட்டத்தில் குளம், கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளின் தரம் எவ்வாறு உள்ளது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பி உள்ளது. நீர்நிலைகளில் கழிவுநீர், குப்பைகள் கொட்டப்படுகின்றனவா என உயர்நீதிமன்ற மதுரை கிளை வினவியுள்ளது. தஞ்சை உடையாளூரில் விதிகளை மீறி மீன்பிடி குத்தகை ஏலம் நடைபெற்றதாக செல்வி என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். நீர்நிலைகளை பாதுகாக்க எடுத்த நடவடிக்கை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தஞ்சையில் குளம், கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளின் தரம் எவ்வாறு உள்ளது :உயர்நீதிமன்றம்
previous post